For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 நாளைக் கடந்த நெடுவாசல் போராட்டம்...'கடவுளிடம்' மனு கொடுத்த மக்கள்! #save neduvasal #save farmers

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் 100 நாளைத் தாண்டி நடைபெற்று வருகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை : நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் நேற்று கடவுளிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் இல்லாத வளமே இல்லை, பொன் விளையும் பூமியாக இருந்தது நம் மாநிலம். ஆனால் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் இன்று வாழ்வாதாரத்திற்கே வழியின்றி அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கிறோம்.

மற்ற மாநிலங்களை எடுத்துக் கொண்டால் அதிகபட்சமாக 10 வகையிலான பொருட்கள் மட்டுமே விளையும், ஏனெனில் அந்த மாநிலத்தின் சீதோஷன நிலை மற்றும் மண்வளம் அப்படி. ஆனால் தமிழகம் மட்டுமே எல்லா வகையான பொருட்களை விளைவிக்கும் மண்வளம், சீதோஷன நிலை அனைத்தையும் கொண்டது.

 இன்னல்களைத் தாண்டி போராட்டம்

இன்னல்களைத் தாண்டி போராட்டம்

அந்த வளங்களை அழிக்கத் தான் பல காலமாக பல இன்னல்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எத்தனை குடைச்சல்கள் கொடுத்தாலும் வளத்தை சுரண்டும் பெரிச்சாலிகளுக்கு எதிராக அவற்றைத் தாக்கபிடித்து வந்தனர் விவசாயிகள்.

 அழிக்க முயற்சி

அழிக்க முயற்சி

இதனால் தற்போது தமிழக இயற்கை வளத்தை ஒட்டு மொத்தமாக அழிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் விவசாயிகளின் உளக் குமுறல். ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் செழிமையான விவசாய நிலங்களில் எண்ணெய் கிணறுகள் அமைத்து அவற்றில் இருந்து வளத்தை உருஞ்சும் வேலையை ஓஎன்ஜிசி கனக் கச்சிதமாக செய்து வருகிறது.

 தொடரும் போராட்டம்

தொடரும் போராட்டம்

புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே போராட்டக் களத்தில் குதித்தனர் உள்ளூர் வாசிகள். அதையும் மீறி பாஜகவின் ஜெம் நிறுவனத்துடன் கை கோர்த்து, திட்ட ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது. என்றாலும் "முயற்சியை கைவிட மாட்டோம், எங்கள் மண்ணில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது" என்று தீர்க்கமாக போராட்டத்தை தொடர்கின்றனர் மக்கள்

 கடவுளிடம் மனு

கடவுளிடம் மனு

முதல் கட்ட போராட்டத்தையும் சேர்த்து நேற்றோடு 100 நாட்கள் முடிந்து விட்டன. இது வரை மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், மாடு, கள், குப்பைத் தொட்டி, வேற்று கிரக வாசிகள் என்று அனைவரிடமும் மனு கொடுத்து விட்டார்கள் ஆனால் ஒரு புரோஜனமும் இல்லை. இதற்கு மேல் யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் கடவுளிடம் மனு கொடுத்துள்ளார்கள். "கடவுளே நீயாவது எங்கள் விவசாய நிலங்களை காப்பாற்று, எங்களை வாழ விடு!" என்று விவசாயிகள் கதறுகின்றனர்.

 திரும்பிப் பார்க்க நாதியில்லை

திரும்பிப் பார்க்க நாதியில்லை

100 நாட்கள் பணம் வாங்கி கொண்டு ஒரு வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து, கூத்தடிக்கும் #BigBossTamil நிகழ்ச்சிக்கு கிடைக்கும் மரியாதையும், ஈர்ப்பும், 100 நாட்களாக வாழ்வாதாரத்திற்காக வீதியில் போராடிக் கொண்டிருக்கும் நெடுவாசல் விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கொந்தளிக்கின்றனர்.

100 நாள் சும்மா இருக்க முடியாது

எவ்வளவு காசு கொடுத்தாலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் ஒரு விவசாயியை 100 நாள் சும்மா ஒரு வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்க முடியாது! என்றும் தங்களது உளக் குமுறல்களை கொட்டித் தீர்க்கின்றனர் இயற்கையை காப்பதற்கான போராடும் போராளிகள்.

English summary
Neduvasal protest continuing after 100 days too to stop the hydrocarbon project and they gave petitions to God to save them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X