முத்துகிருஷ்ணன் தற்கொலை.. சிபிஐ விசாரணைக்கு வேல்முருகன் கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். மேலும் பாஜக ஆட்சியில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் என்பவர் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.பல்கலைக்கழக விடுதியில் நண்பர்களின் அறையில் அவரது உடல் உயிரற்ற நிலையில் காணப்பட்டது.சக மாணவர்கள் புகார் அளித்ததன் பேரில் இந்த மரணம் வெளியில் தெரியவந்திருக்கிறது.

 வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்

வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்

சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் இந்த தகாத மரணம் அறிந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறது. அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதுடன் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறது.

 முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்யவில்லை

முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்யவில்லை

முத்துகிருஷ்ணனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அவரது தந்தை ஜீவானந்தம், மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்ளும்படி எந்தப் பிரச்சனையும் அவனுக்கு இல்லை என்கிறார். மெரிட்டின் பேரிலேயே அந்தப் பல்கலைக்கழகத்தில் சீட் கிடைத்தது, நன்றாகப் படிப்பவன், ஆதலால் எந்தக் குழப்பத்திற்கும் ஆளாகமாட்டான் என்கிறார்.

 முத்துகிருஷ்ணனின் ஃபேஸ்புக் பதிவு

முத்துகிருஷ்ணனின் ஃபேஸ்புக் பதிவு

கடந்த 10ந் தேதியன்று தனது முகநூல் பக்கத்தில் "இங்கு (பல்கலைக்கழகத்தில்) சமத்துவம் இல்லை" என்று முத்துகிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
அண்மைக் காலமாக அங்கு பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவு ஏபிவிபி மாணவர் அமைப்பினர் பிரச்சனைகள் செய்து வருவது நாடறிந்த செய்தி.

 சரவணன் மர்ம மரணம்

சரவணன் மர்ம மரணம்

கடந்த ஆண்டும் இதே டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவ மேல்படிப்பு மாணவர் டாக்டர் சரவணன் மர்மமான முறையில் இறந்துபோனார்.அவர் திருப்பூர் வெல்ளியங்காட்டைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகனாவார்.நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சரவணனின் உடற்கூராய்வு அறிக்கையில், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, யாரோ விஷ ஊசி போட்டு கொன்றிருக்கின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.

 சிபிஐ விசாரணை வேண்டும்

சிபிஐ விசாரணை வேண்டும்

அந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சரவணனின் பெற்றோர் சிபிஐ விசாரணை கேட்கின்றனர். நாடாளுமன்றத்திலும் இது பேசப்பட்டது. முத்துகிருஷ்ணன் சாவிலும் சந்தேகிக்கப்படும் மர்மம் விலக்கப்பட வேண்டும். அதற்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

 பிர்ட்ஜோ படுகொலை

பிர்ட்ஜோ படுகொலை

அண்மையில் தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு அதில் நடவடிக்கை கோரி போராட்டம் நடந்து வருகிறது.இந்திய கடற்படை, கடலோர காவல் படை ஆகியவை பாதுகாப்பு அளிக்காததாலேயே பிரிட்ஜோ கொல்லப்பட்டார்.

 டெல்லி போலீசாரின் அலட்சியம்

டெல்லி போலீசாரின் அலட்சியம்

அதேபோல் மத்திய அரசின் கையில் இருக்கும் டெல்லி காவல்துறையின் பாதுகாவலின்மையே சரவணன், முத்துகிருஷ்ணன் போன்ற தமிழக உயர்கல்வி மாணவர்களின் மர்ம மரணங்களுக்கும் காரணம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Need CBI enquiry on Muthu krishnan says Velmurugan. Muthukrishnan, a JNU research research scholar who ended his life at his friend's room in the University campus yesterday.
Please Wait while comments are loading...