For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட்: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதே பிரச்சனைக்கு தீர்வு.. திருமாவளவன் பேட்டி

நீட் தேர்வு பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று விடுதலை கட்சிகள் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

விழுப்புரம்: நீட் தேர்வு பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று விடுதலை கட்சிகள் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

நேற்று நீட் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழகம் மிகவும் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

Thirumavalavan

இந்த நிலையில் நீட் பிரச்சனை குறித்து விடுதலை கட்சிகள் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.கல்வியை மாநில பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவர வேண்டும்.பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாற்ற வேண்டும். நீட் பிரச்னைக்கு அதுமட்டுமே தீர்வு.

மருத்துக்கல்வியில் நாட்டில் முதலிடத்தில் இருந்தது தமிழகம். நீட் தேர்வால் தற்போது தமிழகம் கடைசி இடத்துக்கு சென்றுள்ளது.

தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு எதிரான சதி இது. அவசரமாக தேர்வு முடிவு வெளியிடப்பட்டது திட்டமிட்ட சதி. தமிழக அரசு எந்த அக்கறையும் இல்லாமல் மத்திய அரசின் சதிக்கு துணைபோகிறது. இந்த நீட் பிரச்சனைக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும், என்றுள்ளார்.

English summary
NEET Killings: Changing education from central to state is the only solution for all problems says, Thirumavalavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X