சினிமா வரிக்கு மட்டும் வாய்ஸ் கொடுக்கிறாரா ரஜினி.. கொதிக்கும் மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் கோரிக்கைவிடுத்துள்ளது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா திரையரங்குகளை மத்திய அரசு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதிக்கப்படுகிறது.

கேளிக்கை வரி மீதான வரியையும் சேர்த்தால் மொத்த வரி 60 சதவீதத்தை தாண்டுகிறது. இதனால் தமிழகம் முழுக்க திங்கள்கிழமை முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

ரஜினி டிவிட்

இதுகுறித்து ரஜினி வெளியிட்டுள்ள டிவிட்டில், தமிழக அரசு தங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசுஎன்பதை மட்டும் பெரிய எழுத்தில் போட்டுள்ளார். அதாவது மத்திய அரசை அவர் எதிர்க்கவில்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

மக்கள் கொதிப்பு

இந்த நிலையில், ரஜினிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். அதுகுறித்து பாருங்கள்.

தமிழருக்காக போராட திரையுலகம் வாங்க..பின்ன நாங்க சப்போட் பன்ன வரோம் தமிழ் சினிமாவுக்கு..

தியேட்டரில் பாதிக்கப்படும் மக்கள்

மக்களும் தான் தியேட்டரில் பாதிக்கப்படுறாங்க திண்பண்டங்கள் அதிகவிலை முன்பதிவு கொள்ளை. அதபத்தி பேச மாட்டிங்களே

ஆக்கப்பூர்வ தொழில்கள்

எத்தனையோ ஆக்கப்பூர்வ தொழில்கள் நசுங்கி கிடக்கும்போது, பிரயோஜனப்படாத சினிமாத்துறைக்கு ஏன் அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

ரஜினி மோதலுக்கு தயாராம்

என் கிட்டே மோதாதே, நான் ராஜாதி ராஜனடா, என போருக்கு தயார் நிலையில் நம் தலைவர் ரஜினி. தில் இருக்குறவன் மோதி பார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens troll Rajiniknth as he raises his voice only on entertainment tax.
Please Wait while comments are loading...