For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புழக்கத்திற்கு வந்தது புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள்! செல்ஃபி எடுத்து ஷேர் செய்யும் நெட்டிசன்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் நவ.8ம் தேதி இரவு 12 மணியோடு செல்லாதவையாகிவிட்டது. அதற்கு பதிலாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அரசு இன்று முதல் புழக்கத்தில் விட்டுள்ளது. நேற்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, புதிய நோட்டுக்கள் வங்கிகளில் நிரப்பப்பட்டன. அஞ்சலகங்களிலும் நிரப்பப்பட்டன.

New currency notes from today

இந்த நிலையில், இன்று முதல் பழைய நோட்டுக்களுக்கு பதிலாக புதிய நோட்டுக்கள் வினியோகம் ஆரம்பித்துள்ளது. புதிய ரூ.500 நோட்டுக்கள் 'காந்தி சீரிஸ்' என்று அழைக்கப்படுகிறது. வழக்கம்போலவே தேசத் தந்தை மகாத்மா காந்தி படம் இதிலும் உள்ளது. டெல்லி செங்கோட்டை படமும் உள்ளது.

New currency notes from today

ரூ.2000 நோட்டு அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. காரணம், அது பெண்களுக்கு பிடித்த பிங்க் வண்ணத்தில் வந்துள்ளது. இதில் இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வு திட்டமான மங்கள்யான் செயற்கைக்கோள் படம் இடம் பிடித்துள்ளது. புதிய நோட்டுக்களை வாங்கியவர்கள் அதை பேஸ்புக் போன்ற தளங்களில் செல்ஃபி எடுத்து ஷேர் செய்து வருகிறார்கள்.

English summary
The new series of Rs. 500 notes, said economic affairs secretary Shaktikanta Das, will be called the Mahatama Gandhi series of bank notes and they also carry a picture of Delhi's Red Fort. The 2000 rupee note that is being introduced carries an image of the Mangalyaan to celebrate India's Mars mission, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X