For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

Google Oneindia Tamil News

New government should stop Cauvery coal-bed methane project: GK Vasan
திருவாரூர்: காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

உச்ச நீதிமன்றத்தின் வழி காட்டுதலின் பேரில் தான் மேலாண்மை குழு அமைக்க கேட்டு வருகிறோம். காவிரி மேலாண்மை குழு அமைப்பது இரு மாநில விவசாயிகளுக்கு பொதுவானது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இரு மாநில விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை குழு அமைக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் கூறி இருப்பது ஏற்புடையது அல்ல. காவிரி டெல்டா பகுதியில் நிலம், நீர்வளத்துக்கு கீழ்தான் மீத்தேன் எரிவாயு உள்ளது. எனவே, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும். இதில் விவசாயிகள், பொதுமக்கள் எண்ணத்தை புரிந்து கொண்டு புதிய மத்திய அரசு செயல்பட வேண்டும். விவசாயிகள் நலனை பாதிக்கும் வகையில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்க கூடாது என்றார்.

English summary
Former central minister GK Vasan has requested the centre to stop the Cauvery coal-bed methane project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X