For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்று பொன்னார்.. இன்று நிர்மலா சீதாராமன்… மீனவர் போராட்டத்தை நிறுத்த பாஜக தொடர் முயற்சி

மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று கோரி 6 நாட்களாக மீனவ மக்கள் தங்கச்சிமடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் சென்று அவர்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் கடந்த 6ம் தேதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். படுகொலைக்கான நியாயம் கேட்டு 6 நாட்களாக மீனவ மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர நேற்று கூட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தங்கச்சிமடத்திற்கு நேரில் சென்று போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் இவர் அளித்த வாக்குறுதிகளை மக்கள் ஏற்க தயாராக இல்லை.

Nirmala Sitharaman visits Thangachimadam

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கச்சிமடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடையே மீண்டும் பேச்சவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மீனவர்களின் நியாயமான போராட்டத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நிர்மலா சீதாராமன் தங்கச்சிமடத்தில் முகாமிட்டுள்ளார்.

வெளியுறவுத் துறை செயலர் நேரில் வந்து மீனவர்கள் மீதான தாக்குதல் இனி தொடராது என உறுதி அளித்தால் போராட்டம் நிறுத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் கூறி வரும் நிலையில், அதற்கான உறுதிமொழியை அளிக்க மறுக்கும் பாஜக அரசு, அமைச்சர்களை விட்டு போராட்டத்தை மட்டும் நிறுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Minister Nirmala Sitharaman meets protesting fishermen, who are on a stir against the killing of their colleague allegedly by the Sri Lankan Navy last week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X