பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு கிடையாது.. முன்பதிவு இன்றி பயணம் செய்யலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

  சென்னை சிறப்பு பேருந்துகள் எந்த ஊருக்கு எங்கு புறப்படும் ?- வீடியோ

  சென்னை: பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு கிடையாது என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்றி நேரடியாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

  கடந்த 8 நாட்களாக தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்து வந்தனர். இதனால் பொங்கல் முன்பதிகள் பாதிக்கப்பட்டது.

  No booking for Pongal special buses -TNSTC

  மேலும் எப்போது விடப்படும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. அதேபோல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களும் திறக்கப்படாமல் இருந்தது.

  இந்த நிலையில் நேற்று இரவு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று காலையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

  ஆனால் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இந்தமுறை முன்பதிவு கிடையாது என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. காலதாமதம் காரணமாக சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

  மேலும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்றி நேரடியாக மக்கள் பயணம் செய்யலாம் எனப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 5 இடங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

  அண்ணாநகர், சைதாப்பேட்டை, பூந்தமல்லி, தாம்பரம் சானிடோரியம், வண்டலூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் சென்னையின் உட்பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TNSTC says that there is no booking for Pongal special buses. Due to the 8 days strike of transport workers, the booking has been cancelled. People can travel in special buses without booking.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற