ஷாக்கிங்.. தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சிசிடிவி இல்லை.. குண்டு வீசியவர்களை பிடிப்பதில் திணறல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் வெடிக்காத குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மர்மநபர்கள் சிலர் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.

No CCTV Camera in Teynampet Police station

இந்த குண்டு வீச்சில் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு செய்தார். மேலும், உயர் அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து வெடிக்காத மற்றொரு குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There is no CCTV Camera in Teynampet Police station, getting delay to catch the culprits.
Please Wait while comments are loading...