For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் பாடம் படிப்பதை யாராலும் தடுக்க முடியாது - கமல்

என்னுடைய பாடத்தின் ஒரு பகுதி கலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மீனவர்களை கட்டிப்பிடித்து கமல் அசத்தல்!-வீடியோ

    ராமேஸ்வரம்: நான் பள்ளிக்கு செல்வதை தடுக்கலாம் என்றும் பாடம் படிப்பதை தடுக்க முடியாது என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் தொடங்கிய கமல்ஹாசன், மீனவர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    Nobody can stall me from learning lessons from Kalam, says Kamal

    அப்போது மீனவர் அமைப்பினர் கமல்ஹாசனை சந்தித்து குறைகளை கூறினர். அவர்கள் அனைவரையும் கட்டித்தழுவி புதிய அரசியல் அத்தியாயத்தை தொடக்கி வைத்தார் கமல்ஹாசன்.

    கடந்த நவம்பர் மாதம் கார்ப்பரேட் பாணியில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் பயணத்தை அறிவித்தார் கமல். இன்றைய தினம் ராமேஸ்வரத்தில் எளிமையான முறையில் செய்தியாளர்களிடம் தனது அரசியல் நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்தினார்.

    நான் கட்சிக்கு ஆள் சேர்க்க வரவில்லை என்றும் உங்களுடன் சேரவே வந்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார் கமல்ஹாசன்.

    மக்கள் முன்பாக கொடி ஏற்ற வேண்டும். மக்கள் முன்பாக கொள்கையை விளக்க வேண்டும். கட்சி கொள்கைகளை மதுரையில் அறிவிப்பேன் என்றார்.

    கலாம் வீட்டுக்கு சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அரசியல் அல்ல. என்னுடைய பாடத்தில் ஒரு பகுதி கலாம்
    நான் பள்ளிக்கு செல்வதை தடுக்கலாம், பாடம் படிப்பதை தடுக்க முடியாது என்றும் கமல் கூறினார். கலாம் பள்ளிக்கு செல்ல முயன்றதில் அரசியல் இல்லை என்றும் கமல் கூறினார்.

    சினிமாவை விட அரசியலில் அதிக பொறுப்பு உள்ளது. அரசியலுக்கு வர அவர்கள் செய்யும் தொழில் முக்கியமில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழக மக்களின் உள்ளங்களில் வாழ்ந்த நான், இனி அவர்களது இல்லங்களில் வாழ ஆசைப்படுகிறேன் என்றும் கமல் கூறியுள்ளார்.

    English summary
    Kamal Haasan has said that no one can stall him from taking few things from Kalam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X