For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக் முதல் செக்கானூரணி வரை... எல்லாம் அசலூர் பயலுக.. ஆனா நம்ம பயலுகளா மாறிப் போனவங்க!

Google Oneindia Tamil News

சென்னை: "மேகி"யை நினைச்சா கண்ணுல வேர்க்குதா பாஸ்.. விடுங்க, பாஸ். "விதி"ப்படிதானே எல்லாம் நடக்கும். இந்த மேகி வெளிநாட்டிலிருந்து இங்கு இறக்குமதியாகி நம்ம ஊர் கிச்சனுக்குள் போய் நச்சென்று அமர்ந்த ஒரு உணவுதான்.

ஆனால் மேகி மட்டுமல்ல மேலும் பலர் "நம்மவர்"களாக மாறி நமது நாட்டுக்குள் சுற்றி வருகிறார்கள். இதில் பல தயாரிப்புகள் நமது நாட்டுத் தயாரிப்பே இல்லை என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். காரணம், நமது உடலோடும், உயிரோடும், வாழ்க்கையோடும் இணைந்து போனவை இந்த தயாரிப்புகள்.

செக் டூ செக்கானூரணி!

செக் டூ செக்கானூரணி!

பெற்ற பிள்ளைகளைக் கூட சிலர் மறந்து விடலாம். ஆனால் காலில் போட்டுள்ள 'பேட்டா'வை யாரும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு இந்தியர்களின் கால் வழியே ஊடுருவி மனங்களைக் கவ்விக் கொண்ட செருப்பு பிராண்ட் பேட்டா. இது உண்மையில் செக் நாட்டைச் சேர்ந்த நிறுவனம். தாமஸ் பேட்டா ஜூனியர் என்பவர் இதை நிறுவினார். பேட்டா இல்லாத இந்தியாவை நினைத்துப் பார்க்க முடிகிறதா??

விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க.. கிச் கிச்சைப் போக்குங்க

விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க.. கிச் கிச்சைப் போக்குங்க

இந்த விளம்பரத்தைப் பார்த்து ரசிக்காத இந்திய உள்ளங்களே இருக்க முடியாது. இந்தியர்களின் தலைவலிக்கு சிறந்த வலி நிவாரணமாக பல காலமாக திகழ்ந்து வருவது விக்ஸ். இது உண்மையில் அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பு.

பான்ட்ஸ்

பான்ட்ஸ்

பான்ட்ஸை மறக்க முடியுமா.. அழகுப் பெண்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் கிரீம். இதுவும் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல.

நம்ம ரெனால்ட்ஸ்!

நம்ம ரெனால்ட்ஸ்!

இந்த நிமிடத்தில் ரோட்டில் போகும் ஒருவரை நிறுத்தி செக்கப் செய்தால் கண்டிப்பாக அவரிடம் ஒரு ரெனால்ட்ஸ் பேனா சிக்கும். அவ்வளவு பிரபலம் இந்தப் பேனா. இதுவும் இந்தியத் தயாரிப்பு அல்ல. பார்க்கர் பேனா தயாரிப்பாளர்களின் படைப்புதான் இந்த ரெனால்ட்ஸ்.. சுருங்கச் சொல்வதானால் ஏழைகளின் பார்க்கர் பேனா இது.

அழுக்குகளைக் கழுவிக் களையும் லைப் பாய்

அழுக்குகளைக் கழுவிக் களையும் லைப் பாய்

இந்த சோப்பை மறக்க முடியுமா... அழுக்குகளைக் கழுவிக் களையும் சோப் மட்டுமல்ல.. எவ்வளவு தேய்ச்சாலும் கரையாத சோப்பும் கூட.. இதுவும் இந்தியாவின் சோப்பு அல்ல.. இந்தியர்களுக்கு யுனிலீவர் நிறுவனம் போடும் சோப்பு இது!

பற்கள் பளிச்சிட

பற்கள் பளிச்சிட

காலையில் எழுந்ததும் வேப்பங்குச்சியைப் பிய்த்து பல் தேய்க்கும் பழக்கம், சேர, சோழ, பாண்டியர் காலத்துடன் ஓடிப் போய் விட்டது. இப்போதெல்லாம் கோல்கேட் உள்ளிட்டவதைான். இந்த கோல்கேட் நம்ம ஊர் அல்ல. மாறாக இது ஒரு அமெரிக்கத் தயாரிப்பாகும்.

மம்மி கொடுக்கும் ஹார்லிக்ஸும் இறக்குமதிதான்

மம்மி கொடுக்கும் ஹார்லிக்ஸும் இறக்குமதிதான்

காலையிலும், மாலையிலும் பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக நாம் பாலில் கலக்கிக் கொடுக்கும் ஹார்லிக்ஸும் கூட நமக்குச் சொந்தமில்லைங்க. இதுவும் வெளியிலிருந்து வந்ததுதான்.

அப்ப நமக்கு என்னதான் சொந்தம்?

அப்ப நமக்கு என்னதான் சொந்தம்?

கண்டிப்பாக நமக்குச் சொந்தமானதும் நிறையவே இருக்கு.. ஆனால் அதையெல்லாம் நாம் பரவலாக்க மறந்து விட்டோம் அல்லது அதிகமாக பயன்படுத்தத் தவறி விட்டோம்... எத்தனை பேர் இன்று பருத்திப் பால் குடிக்கிறோம்.. கோக்கும், பெப்சியும்தானே வேகமாக உள்ளே போகிறது... அது போலத்தான்.

வந்தாரை (மட்டும்) வாழ வைப்போம்!

வந்தாரை (மட்டும்) வாழ வைப்போம்!

வந்தாரை வாழ வைக்கும் என்ற பழமொழி உண்டு. அந்த அடிப்படையில் கோல்கேட் முதல் மேகி வரை வெளியிலிருந்து வந்தவற்றை மட்டுமே வாழ வைத்துப் பழகி விட்டார்கள் இந்தியர்கள். இப்போது அதில் குறை வரும்போது தடுமாறிப் போகிறோம்.. விசித்திரம்தான்!

English summary
Not only the Maggi noodles is an outsider which is dominating the Indian market. But there are many foreign products which are popular in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X