விலகிய ஓபிஎஸ்.. டக்குன்னு ஏற்றுக் கொண்ட கவர்னர்.. சசி பதவி வெறிக்கு பலியான "முதல்"வர்.. பிளாஷ்பேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவினால் பலிகொடுக்கப்பட்ட ஓபிஎஸ்- வீடியோ

  சென்னை: சசிகலா முதல்வராக வேண்டும் என்பதற்காக தனது முதல்வர் பதவியை ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்த நாள் இன்றுதான். இதே நாளில் அவரது ராஜினாமாவை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டார். சசிகலா இந்ச மாநிலத்தின் முதல்வராக போகிறாரா என்று தமிழக மக்கள் அதிர்ச்சியுடன் இருந்தனர்.

  ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து கட்சியினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜெயலலிதாவால் இரு முறை முதல்வராக நியமிக்கப்பட்டவரும் ஜெ.வின் நம்பிக்கைக்குரியவருமான ஓ.பன்னீர் செல்வம் டிசம்பர் 6-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

  இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமித்தனர். இதையடுத்து கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையில்தான் இருக்க வேண்டும் என்று ஒரு குரல் எழுந்தது. இதை கேட்டும் ஓபிஎஸ் ராஜினாமா செய்யாமல் உள்ளதால் அவருடன் அமைச்சர்கள் தாமரை இலைபோல் இருந்தனர்.

  நற்பெயர்

  நற்பெயர்

  கட்சியின் நிர்வாகிகள் எத்தனை அவமதிப்பு செய்தாலும் அதை புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டு வர்தா புயல், ஜல்லிக்கட்டு பிரச்சினை ஆகியவற்றை திறமையாக கையாண்டார். இதற்கு ஓபிஎஸ்ஸை மக்கள் பாராட்டினர். கட்சி வேறுபாடின்றி ஒரு தவறு கூட ஓபிஎஸ் மீது சொல்லப்படவில்லை.

  ஓபிஎஸ்ஸை மதிக்கவில்லை

  ஓபிஎஸ்ஸை மதிக்கவில்லை

  இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கட்சியும் ஆட்சியும் சசிகலாவிடம்தான் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த போதும் சசிகலாவின் பதவி வெறி அடங்கவில்லை.

  ராஜினாமா

  ராஜினாமா

  இதையடுத்து சசிகலாவின் நிர்பந்தத்தால் முதல்வர் பதவியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். அதன் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆளுநரும் அன்றைய தினமே ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுவிட்டு மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வராக செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.

  சசிகலாவை ஒதுக்கிய ஓபிஎஸ்

  சசிகலாவை ஒதுக்கிய ஓபிஎஸ்

  சசிகலா முதல்வராக போகிறாரா, தமிழகம் இன்னும் எத்தனை சோதனைகளை தாங்கிக் கொள்ளுமோ என்ற விரக்தியில் தமிழக மக்கள் இருந்தனர். அது ஒருவழியாக உச்சநீதிமன்றத்தால் நடைபெறாமல் போயிற்று. அன்று சசிகலாவுடன் சேர்ந்து கொண்டு மற்று நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை விலக்கி வைத்தனர். ஆனால் ஓபிஎஸ்ஸோ புன்முறுவலுடன் தர்மயுத்தத்தை தொடங்கி இன்று சசிகலா, தினகரனையே ஒதுக்கி வைத்துவிட்டார். ஜெயலலிதாவால் கூட செய்ய முடியாததை ஓபிஎஸ் செய்துவிட்டார். இதுதான் வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்பதோ என கேட்க வைக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  O.Panneer Selvam resigns his CM post on this day last year. Governor also accepts his resignation and asks him to continue as CM till further measures to be taken.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற