For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரக்கமே இல்லாமல் இலங்கை கடற்படை செயல்படுவதா? ஓபிஎஸ் கடும் கண்டனம்

தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசும், மாநில அரசும் மீனவர் விவகாரத்தை அலட்சியமாக எண்ணாமல் தீவிர நடவடிக்கை எடுத்து இது போன்ற கொடுமைகள் இனிமேல் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்வதோடு இரக்கமே இல்லாத இலங்கை கடற்படைக்கும் இலங்கை அரசுக்கும் கண்டத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக மீனவர்களுக்கு எப்பொழுதும் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம், சிறைப்பிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தவர் ஜெயலலிதா. மத்திய அரசுக்கு தனது வேண்டுகோளை உறுதியாகத் தெரிவித்தவர் ஜெயலலிதா .

o. pannerselvam Condemnes on Sri Lankan navy

மீனவர்களைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்ததோடு பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்குத் தேவையான அத்தனை நிவாரணங்களையும் வழங்கி அவர்களின் கண்ணீரைத் துடைத்தவர் ஜெயலலிதா.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், அடித்து துன்புறுத்துவதும், வலைகளை அறுத்து வீசுவதும், மீனவர்களை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதும், வாடிக்கையாக நடந்து வந்தது. ஜெ.வின் ஆட்சியிலே அது கட்டுப்படுத்தப்பட்டு. மீனவ குடும்பங்களில் நிம்மதி நிறைந்திருந்தது.

ஜெ.மறைவிற்குப் பிறகு இலங்கை கடற்படையின் அராஜகம் அதிகமாகிவிட்டது. 4-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், 5-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினம் மீனவர்கள் 24 பேரையும் இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்த அராஜகத்தின் உச்சமாக நேற்று ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் கையெறி குண்டுகளை வீசி தாக்கியிருக்கிறார்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டிருக்கிறார்கள். இதில் தாசன் என்ற 22 வயது மீனவ இளைஞர் மீது குண்டு பாய்ந்து படகிலேயே பலியாகியிருக்கிறார், சரோன் என்ற மீனவ இளைஞர் மீது குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

இலங்கை கடற்படையின் இந்த வெறி ஆட்டத்தால், மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மீனவக் குடும்பங்களும், மீனவ மக்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

மத்திய அரசும், மாநில அரசும் இதை அலட்சியமாக எண்ணாமல் தீவிர நடவடிக்கை எடுத்து இது போன்ற கொடுமைகள் இனிமேல் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்வதோடு இரக்கமே இல்லாத இலங்கை கடற்படைக்கும் இலங்கை அரசுக்கும் எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

English summary
former chief minister o. pannerselvam Condemnes on tamil fisherman killed in Sri Lankan Navy firing
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X