ஓ மை காட்.. ஏசி மெஷினில் யார் தொங்கறா பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வீட்டின் ஏசியில் எலியை கவ்விக் கொண்டு பாம்பு வெளியே வந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுவாக நம் அறையில் எலி, கரப்பான்பூச்சி, பல்லி உள்ளிட்ட ஜந்துக்கள் நுழைந்து விட்டால் அவை வெளியேறும் வரை நாம் வழிமேல் விழி வைத்து காத்திருப்போம். அதுவும் நாம் உறங்கும் அறையில் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.

இந்நிலையில் பாம்பும், எலியும் சேர்ந்து வந்தால் எப்படி இருக்கும். பெரும் திகிலாக இருக்கும். அதுவும் ஏசிக்குள்ளே இருந்து வந்தால் பா....பா.... பா.... என ரஜினி மாதிரி பாம்பு பாட்டுதான் பாட வேண்டும்.

இந்த வீடியோவில் உள்ளவரின் வீட்டில் உள்ள ஏசி மெஷினில் ஒரு பாம்பு, தனது வாயில் எலியைக் கவ்வியபடி வெளியே வந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதை வீடியோவில் படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டனர். பிறகென்ன வைரலாகி விட்டது அது.

சுமார் 10 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை பேஸ்புக்கில் இதுவரை 5.8 கோடி பேர் பார்த்து மெய்சிலிர்த்துள்ளனர். இந்த வீடியோ கடந்த 10-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A rather terrifying video shows a snake dangling from an air conditioner with a mouse in its mouth.
Please Wait while comments are loading...