புத்தாண்டு கொண்டாட்டம்... சென்னையில் பைக் விபத்தில் சிக்கி இளைஞர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் எழும்பூர் சாலையில் கேரள மாநில இளைஞர் ஒருவர் பலியானார்.

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தங்களது இரு சக்கர வாகனங்களை எடுத்து கொண்டு சாலையில் நெருப்பு கக்கும் அளவுக்கு இளைஞர்கள் சீறி பாய்ந்தனர்.

One died in Chennai while celebrating New year

விபத்துகள் குறித்து போலீஸார் அறிவுறுத்தியும், கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டும் இது போன்ற நிலைதான் ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இந்நிலையில்
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரெய்மான் (29).

இவர் சென்னையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அவர் மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்றார். அப்போது கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் இரு சக்கர வாகனத்தில் ரெய்மான் திரும்பி கொண்டிருந்தார்.

எழும்பூர் லேன்ட்ஸ் கார்டன் சாலையில் அதி வேகமாக வந்த ரெய்மானின் இருசக்கர வாகனம் நடைபாதையில் மோதியது. விபத்தில் தலையில் படுகாயம் அடைந்து கேரளாவைச் சேர்ந்த ரெய்மான் (29) உயிரிழந்தார்.

இதுகுறித்து எழும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த இளைஞர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
New year celebration ended in a tragedy in Chennai Egmore. A Keralite hits in platform with his bike and died in the spot.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற