அதான் வேலை செய்வதை விட அதிகமாகவே சம்பாதிக்கிறாங்களே.. நடிகர்கள் குறித்து வாசகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ்க்கு வாசகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் என்ற தகுதியை வைத்துக் கொண்டு கட்சி தொடங்குவது என்பது நாட்டிற்கு பேரழிவு என பிரகாஷ்ராஜ் நேற்று கூயிருந்தார். இதுகுறித்து வாசகர்களிடம் கருத்துக்கேட்டது ஒன் இந்தியா தமிழ்.

அதற்கு ஏராளமான வாசகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில

சுரேஷ் விழுப்புரம்

சுரேஷ் விழுப்புரம்

சுரேஷ் என்பவர் அனுப்பியுள்ள மெயிலில் தன் வாழ்நாளில் மக்களுக்காக எந்த விதமான சேவையும் செய்யாமல் தான் ஒரு மிக பெரிய நடிகன் என்று திடிரென கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபடுவது மற்றும் இணையத்தில் மட்டும் கருத்து சொல்வது மக்களிடையே அருவருப்பை உண்டாக்கும் என்று கூறுகிறார்.

அருள் அற்புதராஜ்

அருள் அற்புதராஜ்

சரியான மற்றும் அக்கறையான கருத்து... இந்த மக்களுக்காகவும் சமுக ஒற்றுமைக்காகவும் விலும்பு நிலை மக்கள் உரிமைக்காகவும் பல தலைவர்கள் தங்கள் வாழ்கையே அர்ப்பணித்த அர்ப்பணிக்கின்ற தலைவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் உள்ளன இந்த மண்ணில் அவர்களில் ஒருவர் தலைமைக்கு வந்தால் தமிழகம் வளர்ச்சி அடைந்து சம உரிமையோடு வாழ முடியும். ஏன் நடிகர்கள் ஆள வேண்டும் களப பணியிலும் மக்கள் உரிமைக்காக வீதிக்கு வராதவர்கள் ... ஆட்சி பீடத்திற்கு ஆசை படுவதும் .. அதை அறியாமல் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பதும் நாம் இன்றும் விழிப்புணர்வு அடையவில்லை என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது

வாசகர் அருளானந்தம்

வாசகர் அருளானந்தம்

ஏற்கனவே அவர்கள் வேலை செய்ததை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். எனவே பணக்காரர்களுக்கு பணத்தை கொடுக்காதே.. என்கிறார் வாசகர் அருளானந்தம்

சுதாகர் கிரிஷ்தயா

சுதாகர் கிரிஷ்தயா

பிரகாஷ் ராஜின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.. அது உண்மைதான்.. என்கிறார் இந்த வாசகர்.

ரவி ராஜபாண்டியன்

ரவி ராஜபாண்டியன்

அந்த அறிக்கை மிகவும் சரியானது. பிரகாஷ்ராஜ் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் அதனை பாராட்டுகிறேன்..
நடிகர்கள் கட்சித் தொடங்கக்கூடாது மேலும் சமூகத்திற்கு பொது சேவை ஆற்றக்கூடாது என்பதற்கே எனது ஆதரவு என்கிறார் இந்த வசாகர்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
One india readers has shared their views on Prakashraj statement about actor arrival in Politics. Actor Prakashraj said Actors coming to politics is not good for the nation.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற