சசி கும்பல் இல்லாத அதிமுக- எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் பச்சைக்கொடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது பற்றி இதுவரை யாரும் பேசவில்லை. யாராவது பேச வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. தொடர்ந்து, கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

இதனிடையே, கடந்த 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு, அதிமுக கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையால், இறுதியில் ஆர்.கே.,நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அணிகள் இணைய முடிவு

அணிகள் இணைய முடிவு

டிடிவி தினகரனையோ, சசிகலா குடும்பத்தினரையே ஏற்றுக்கொள்ள தொண்டர்கள் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே கட்சி, சின்னம், ஆட்சியை காப்பாற்ற முடியும் என்பதை இரு அணியினருமே அறிந்துள்ளனர். எனவே தினகரனை ஒதுக்கிவிட்டு இணைந்து பேச அனைவரும் விரும்புவதாக தகவல் வெளியானது.

இரட்டை இலை பெற லஞ்சம்

இரட்டை இலை பெற லஞ்சம்

இரட்டை இலை சின்னதை பெற ரூ.60 கோடி பேரம் பேசப்பட்டு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட உள்ளது. டிடிவி தினகரன் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளதால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் நம்பிக்கை

ஓபிஎஸ் நம்பிக்கை

இதனிடையே இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், இது குறித்து பேச யாரும் தங்கள் அணியை அணுகவில்லை என்றும் அவ்வாறு நிகழ்ந்தால் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு தயார்

பேச்சுவார்த்தைக்கு தயார்

யாராவது பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில் அமர்ந்து பேச தயாராக உள்ளதாகவே கூறிய ஓ.பன்னீர் செல்வம், இரட்டை சின்னமும், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
We are ready to speak for another team said O.Panneerselvam, He said that, two leaves symbol is ours.
Please Wait while comments are loading...