வரிசை கட்டி நின்ற கார்கள்.. அதகளப்படும் கிரின்வேஸ் சாலை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள ஓபிஎஸ் இல்லத்தில் எடப்பாடி கோஷ்டியுடன் இணைவது பற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் கார்கள் என பல வாகனங்கள் அணிவகுத்துச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் உண்டானது.

சென்னை கிரின்வேஸ் சாலையில் அமைச்சர்களின் வீடுகள் அமைந்துள்ளது. அதில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் வீட்டில் எடப்பாடி கோஷ்டியுடன் இணைவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

Ops house in Greenways road is full of traffic

அந்த கூட்டத்தில் பங்கேற்க பி.எச்.பாண்டியன், கே.பி முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன், செம்மலை, வனரோஜா எம்.பி உள்ளிட்ட தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என பலர் திரண்டு வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி காரில் வந்ததால், அந்த சாலையில் கடும் நெரிசல் உண்டானது.

மேலும் அங்கு தொண்டர்கள் கூட்டம் அதிகமாக வந்த காரணத்தாலும் நெரிசல் உண்டானது. சிலநாட்களாக அமைதியாக இருந்த ஓபிஎஸ் வீடு, மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Greenways road Ops house, Admk merging meeting was held. So many ministers MLAs, MPs came for the meeting by car and it made heavy traffic in green ways road.
Please Wait while comments are loading...