அடித்து வைத்துள்ள 50,000 கோடி சொத்துகளை பாதுகாக்கவே ஓபிஎஸ் டிராமா போடுகிறார்.. விபி கலைராஜன் பகிர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் தான் சேர்த்து வைத்துள்ள 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பாதுகாக்கவே டிராமா போடுகிறார் என விபி கலைராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சசிகலா குடும்பத்தினர் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்கள் அவர்களை ஏன் கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிரடியாக பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கை வைத்திருப்பவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ விபி கலைராஜன். சசிகலாவின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது.

இதையடுத்து சசிகலா அணியில் சேர்ந்த அவர், சசிகலாவுக்கும் டிடிவி தினகரனுக்கும் தீவிர ஆதரவு தெரிவித்து வருகிறார்.முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் ஓபிஎஸின் கையை வெட்டுவேன் எனக்கூறி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியவர் கலைராஜன்.

கட்சியில் இருந்து நீக்கவில்லை

கட்சியில் இருந்து நீக்கவில்லை

சர்ச்சைக்கு பெயர் போன விபி கலைராஜன் சன்நியூஸ் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது சசிகலாவையும், டிடிவி தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றார்.

என்ன தவறு செய்தார்கள்?

என்ன தவறு செய்தார்கள்?

சசிகலா குடும்பத்தினர் என்ன தவறு செய்தார்கள் அவர்களை ஏன் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சசிகலா குடும்பத்தினரின் குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கலைராஜன், ஓபிஎஸ் குடும்ப அரசியல் செய்யவில்லையா என பதில் கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ்தான் முன்வந்தார்

ஓபிஎஸ்தான் முன்வந்தார்

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, அவரது மகன்கள்,மருமகன்கள் என அனைவரையும் கலைராஜன் கடுமையாக சாடினார். ஓபிஎஸ் தானாகவே முன்வந்து சசிகலாவை சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்தார் என்றும் கலைராஜன் கூறினார்.

யாரும் கட்டாயப்படுத்தவில்லை

யாரும் கட்டாயப்படுத்தவில்லை

ஓபிஎஸ் சசிகலாவின் காலில் விழுந்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கலைராஜன் கூறினார்.

டிரமா போடுகிறார்

டிரமா போடுகிறார்

மேலும் தான் அடித்து வைத்துள்ள 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பாதுகாக்க ஓபிஎஸ்க்கு ஒரு பதவி தேவைப்படுகிறது. அதற்காகவே ஒரு அணியை திரட்டி வைத்துக்கொண்டு டிராமா போடுகிறார் என்றும் கலைராஜன் குற்றம்சாட்டினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VP Kalairajan accuses that OPS playing drama. He has 50000 crore worth property to secure that he needs a post Kalairajan said.
Please Wait while comments are loading...