கனியாமூர் பள்ளி கலவர வழக்கு.. கோர்ட்டில் குவிந்த 500க்கும் மேற்பட்டோர்.. நீதிபதி போட்ட உத்தரவு!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 500க்கும் மேற்பட்டோர் இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வழக்கு ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இந்தக் கலவரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளி கலவரம் தொடர்பாக பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தாய்மாமன் செந்தில்முருகுன் மற்றும் 53 சிறார்கள் உட்பட 916 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு தற்போது வரை விசாரித்து வரும் நிலையில், பள்ளி சூறையாடல் வழக்கில் 615 பேர் ஒரே நேரத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இன்று கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் 500க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனால் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் இன்று 500க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். முதற்கட்டமாக 20 பேர் நீதிபதி முன்பு
ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications