விருதுநகர் போறீங்களா.. அங்கே மார்க்கெட்டில் பாமாயில் விலை என்ன தெரியுமா.. பதற வைத்த பச்சை பட்டாணி
விருதுநகர்: பாமாயில் விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், அதுகுறித்து வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.. என்ன காரணம்?
வரத்துக்குறைவு காரணமாக சென்னையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது.. அதிலும், துவரம் பருப்பின் விலை கிலோ 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.
ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால்தான், தமிழ்நாட்டுக்கு வரும் மளிகைப் பொருட்களின் வரத்தில், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காரணம் சொல்கிறார்கள்.

கோயம்பேடு: எனினும், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை திடீரென அதிகரித்தது.. து.பருப்பை தவிர, பாசிப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் 20 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துவிட்டன.
இந்நிலையில் விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரமும் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
கடலை எண்ணெய்: அதன்படி, "ரூ.3,000க்கு விற்ற 15 கிலோ கடலை எண்ணெய் ரூ.100 அதிகரித்து ரூ.3,100க்கும், ரூ. 1,390க்கு விற்ற 15 கிலோ பாமாயில் ரூ. 70 அதிகரித்து ரூ.1,460க்கும், மல்லி நாடு உருட்டு 40 கிலோவிற்கு ரூ. 300 அதிகரித்து ரூ. 2,800, முதல் ரூ.3,100க்கும் விற்கப்படுகிறது.. 15 கிலோ நல்லெண்ணெய் ரூ.6,435, சர்க்கரை 50 கிலோ ரூ.1,980, மைதா 90 கிலோ பை ரூ.4380, பொரிகடலை 55 கிலோ ரூ.4250, கொண்டைக்கடலை 100 கிலோ ரூ. 5850க்கும் விற்கப்படுகிறது.
100 கிலோ துவரம் புதுசு நாடு வகை ரூ.12,500, நயம் புதுசு லயன் ரகம் ரூ.14,000க்கு விற்கப்படுகிறது. நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.8400, பாசிப்பயறு நாடு ரூ.8200, பாசிப்பயறு இந்தியா லயன் மீடியம் ரூ.12,000 விற்கப்படுகிறது.. 100 கிலோ மசூர் பருப்பு உடைத்தது ரூ.10,100க்கும், உருட்டு உளுந்தம் பருப்பு நாடு ரூ. 11,800, பர்மா வகை ரூ.12000, தொலி உளுந்தம் பருப்பு நாடு ரூ. 10,200, பாசிப் பருப்பு ரூ.10,000க்கும் விற்கப்படுகிறது.
மல்லி வத்தல்: மாவட்டம் முழுவதும் நாட்டு ரக வத்தல் வரத்து இல்லை. குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ. 24,000 முதல் ரூ.26,000க்கும், முண்டு வத்தல் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரையும் விற்கப்படுகிறது. மல்லி நாடு உருட்டு 40 கிலோவிற்கு ரூ. 300 அதிகரித்து ரூ. 2,800, முதல் ரூ.3,100க்கும், லயன் வகை ரூ. 3,200 முதல் ரூ.3,500க்கும் விற்கப்படுகிறது.
மைதா முதல் ரகம் ரூ.4,380 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,500 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,470 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.1,390 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.5,600 முதல் ரூ.6,200 வரையிலும், பட்டாணி பருப்பு ரூ.6 ஆயிரம் ஆகவும்காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோவிற்கு ரூ.20,100 ஆகவும், A ரகம் ரூ.20,600 ஆகவும், C ரகம் ரூ.17,300 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.10,700 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.9600 ஆகவும் விற்பனையானது.
வியாபாரிகள்: இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் சொல்லும்போது, பண்டிகை காலங்களில் மட்டுமே, பலகார வகைகளுக்கு அடிக்கடி விலையை ஏற்றி, இறக்கம் செய்ய முடியாது.. அப்படி நாங்கள் விலையை மாற்றி மாற்றி நிர்ணயம் செய்தால் பொதுமக்கள் தாங்கள் வாங்கி சாப்பிடும் பலகாரங்களின் அளவை குறைத்துவிடுவார்கள். இதனால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications