வீடுகளுக்குள் வெள்ளம்... முடிச்சூர்வாசிகள் உறவினர்கள் வீடுகளுக்கு படையெடுப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் மூட்டை முடிச்சுகளுடன் அங்கிருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்கு தஞ்சம் அடைய செல்கின்றனர்.

வடகிழக்கு பருவமழையால் நேற்று சற்று அதிகமாகவே மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி, கொரட்டூர், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் முழங்கால் அளவுக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.

People from Mudichoor packed their things and started to their relatives house

இன்னும் மழை தொடரும் என்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூரில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கடந்த 2015 வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் முக்கியமானவற்றை மூட்டை கட்டிக் கொண்டனர்.

இதையடுத்து சென்னையிலோ அல்லது புறநகர் பகுதிகளிலோ உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு புறப்பட்டுள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது மிகவும் பாதிக்கப்பட்டது முடிச்சூர் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Flood water get inside to the house in Mudichoor areas. People packed their things and started to go to their relative's house.
Please Wait while comments are loading...