கோபியில் பெண்கள் ஆவேசம்.. காலிக் குடத்துடன் செங்கோட்டையனை முற்றுகையிட்டு போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே காலிக்குடங்களுடன் மறியலில் பெண்கள் ஈடுபட்ட போது அங்கு வந்த அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோடை தொடங்குவதற்கு முன்பே அனைத்து நீர் நிலைகளும் வறண்டுவிட்டன. இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் அன்றாடம் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக அலைந்து வருகின்றனர்.

People of Gobichettypalayam has blockaded Minister Chengottaiyan

எனினும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு எந்த வித முயற்சியையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ஆங்காங்கே சாலை மறியலிலும், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டையன்காரன்கோயில் பகுதியில் காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அப்போது மறியல் நடக்கும் பகுதிக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Water crisis throughout TamilNadu. People often protest against this. Gopichettypalayam people has blockaded Minister Chengottaiyan demanding to resolve water problem.
Please Wait while comments are loading...