வர்தா போய் வந்துள்ளது மாருதா... சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக மாற்றத்தை தருமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மாருதா புயலாக மாறியுள்ளது. இது நாளை மியான்மிர் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று காற்றழுத்ததாழ்வு மண்டலாமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2 மணிக்குப் பிறகு புயலா மாறியுள்ளது.

இந்த புயலுக்கு மாருதா என பெயரிடப்பபட்டுள்ளது. மாருதா புயல் நாளை மியான்மர் அருகே கரையை கடக்கும என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னாபின்னமாக்கிய வர்தா

சின்னாபின்னமாக்கிய வர்தா

கடந்த டிசம்பர் மாதம் அந்தமான் கடற்பகுதியில் உருவான வர்தா புயல் டிசம்பர் 12ஆம் தேதி சென்னை பழவேற்காடு பகுதியில் கரையை கடந்தது. இந்த வர்தா புயலால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை மாநகரே சின்னாபின்னமானது. சென்னையில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும ஏராளமான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன.

திண்டாடிய மக்கள்

திண்டாடிய மக்கள்

120 கிலோ மீட்டர் வரை சுழன்றடித்த புயலால் ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் என ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்று மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாகினர்.

20 ஆண்டுக்குப்பிறகு புயல்

20 ஆண்டுக்குப்பிறகு புயல்

வர்தா புயல் புரட்டிப்போட்ட சென்னையின் பல பகுதிகளில் இயல்புநிலை திரும்ப கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலானது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையை தாக்கிய புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னையின் பல இடங்களில் மரக்குவியல்களாக காணப்பட்டன.

மீண்டும் வந்துள்ள மாருதா

மீண்டும் வந்துள்ள மாருதா

வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் மெல்ல மறந்து வரும் நிலையில் வங்கக்கடலில் மாருதா புயல் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டாலும் புயல் என்றதும் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னையை பார்க்காதா மாருதா?

சென்னையை பார்க்காதா மாருதா?

இருப்பினும் அடித்து வெளுக்கும் வெயிலுக்கும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்துக்கும் தீர்வு கிடைக்கும் வகையில் புயல் மழை வந்தால் சரி என்றும் சென்னை வாசிகள் எண்ணத் தொடங்கியுள்ளனர். மாருதா புயல் மியாமரைதான் தாக்குமா சென்னையை ஒரு பார்வை பார்க்காத என எதிர்ப்பார்க்க வைக்கிறது சென்னையில் தகிக்கும் வெயில்...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cyclone Maarutha has formed in Bay of bengal. It will hit Myanmer tomorrow. Chennai people remembers the vardah cyclone which was hit Chennai last year.
Please Wait while comments are loading...