For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை.. மும்பையுடன் போட்டியிடும் சென்னை!

பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து அதிக விலையில் விற்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து உள்ளது. மும்பைக்கு நிகராக பெட்ரோல், டீசல் விலை சென்னையில் உயர வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து உயர்வை சந்தித்த விலை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.

Petrol and Diesel prices get hike today too in Chennai

அதே சமயம் இந்த விலையில் இன்னும் அதிக உயர்வு ஏற்படும் என்று பொருளாதர நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது.

இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் ஏற்பட்டு அதிகரித்தது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்தது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.62காசுகளாகும். டீசல் விலை 42 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.61காசுகளாகும்.

மும்பையில் பெட்ரோல் விலை 87 ரூபாய்க்கு விற்கிறது. இந்தியாவிலேயே அங்குதான் பெட்ரோல் விலை அதிக அளவில் விற்கிறது.

விரைவில் சென்னையும் அந்த நிலைக்கு ஆளாக வழியுள்ளது. தினமும் பைசா கணக்கில் பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.

English summary
Petrol and Diesel prices get hike today too in Chennai. Gets Fresh High as PSU oil firms began passing on a spike witnessed in international crude oil rates to consumers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X