ரஜினியுடன் சிரித்த முகத்துடன் கைகுலுக்கிய பிரதமர்... "சிக்னல்" கிடைச்சிருச்சா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடி நிகழ்ச்சியில் மகள், மருமகனுடன் ரஜினிகாந்த் பங்கேற்பு!- வீடியோ

  சென்னை: சென்னையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி விழா முடிந்து செல்லும் போது முன்வரிசையில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்துடன் சிரித்த முகத்துடன் கைகுலுக்கி விட்டுச் சென்றார்.

  தினத்தந்தியின் பவளவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் இருந்தாலும் அவருடைய ஒவ்வொரு அசைவுகளும் அனைவராலும் உற்று பார்க்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்த அவர் தனது உரையை தமிழில் தொடங்கி அசத்தினார்.

  அரசியல் குறித்த எந்த கருத்தையும் கூறாமல், ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு என்ன என்பதை மட்டுமே பேசினார். ஆனால் பேச்சின் தொடக்கத்திலேயே மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதல் சொன்னதோடு தமிழக அரசுக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று கூறி மக்களின் தேவை என்னவோ அதை பற்றி மட்டும் ஒரு துணுக்கு செய்தியைச் சொன்னார்.

   விழா இறுதியில் நடந்த கைகுலுக்கல்

  விழா இறுதியில் நடந்த கைகுலுக்கல்

  மின்னல் வேகத்தில் விழா அரங்கிற்கு வந்து 10 நிமிடத்தில் உரையாற்றி முடித்த கையோடு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்த அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கு கைகுலுக்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும் இந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி அவருக்கு கைகுலுக்கினார்.

   ரஜினியின் பக்கம் திரும்பிய பார்வை

  ரஜினியின் பக்கம் திரும்பிய பார்வை

  இதே போன்று முன்வரிசையில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் அருகில் வந்து நின்ற பிரதமர் மோடி. அவரைப் பார்த்து சிரித்தபடியே தோளில் தட்டிக் கொடுத்து கைகுலுக்கினார். நடிகர் ரஜினி மீது எப்போதுமே பாஜகவிற்கு ஒரு கண் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றதும் அமைந்தது.

   கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதா

  கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதா

  அரசியலுக்கு வரும் ரஜினியை இழுக்க பாஜக முயற்சிப்பதாக எழுந்த பரபரப்புகள் எல்லாம் அடங்கி, ரஜினியின் அரசியல் பிரவேசம் ஜவ்வாக இழுக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமருடன் ரஜினி கைகுலுக்கி நிற்கும் புகைப்படம் பாஜகவினருக்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் அமைந்திருக்கக் கூடும். ஒருவேளை நடிகர் ரஜினி பாஜகவிற்கு பச்சை கொடி காட்டிவிட்டதற்கான சமிக்ஞையாக சிரித்த முகத்துடன் மோடி ரஜினியுடன் கைகுலுக்கிவிட்டு சென்றாரோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. எனினும் இது ஒரு மரியாதை நிமித்தமான கைகுலுக்கலே தவிர இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்ற வாதங்களும் எழுகின்றன.

   புறக்கணிக்கப்பட்டாரா, புறக்கணித்தாரா?

  புறக்கணிக்கப்பட்டாரா, புறக்கணித்தாரா?

  மற்றொரு புறம் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காததும் அனைவராலும் கவனிக்கப்பட்டது. அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஒரு தரப்பில் தகவல் சொல்லப்படுகிறது. அப்படியானால் திட்டமிட்டே கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டாரா அல்லது கமல் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தாரா என்ற களேபரங்களும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  PM Narendra Modi on his Chennai visit hand shaked with Actor Rajinikanth in a friendly manner but it leads to an argument whether Rajini given green signal for BJP on his political career.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற