சென்னை கடற்கரை சாலையில் காரில் தொங்கியபடியே மக்களுக்கு கை அசைத்த மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள்... கருணாநிதிக்கு மோடி அழைப்பு- வீடியோ

சென்னை : சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி கடற்கரை சாலையில் நின்றிருந்த பொதுமக்களுக்கு மழை தூறல்களுக்கு நடுவே காரில் தொங்கியபடியே கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பிரதமர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரியின் இல்ல திருமணம், தினத்தந்தியின் பவள விழா கொண்டாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார் பிரதமர் மோடி. சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தினத்தந்தி பவள விழாவை முடித்துக் கொண்டு எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற பொருளாதார ஆலோசகர் சோமநாதன் மகள் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி புறப்பட்டார்.

 PM Modi waves his hands by wetting in rain

அப்போது கடற்கரை சாலை வழியாக மோடியின் கான்வாய் வாகனம் வந்தபோது வழிநெடுகிலும் தொண்டர்களும், மக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த மோடி, மழை தூறி கொண்டிருந்தபோதிலும் காரில் தொங்கியபடியே தொண்டர்களுக்கு கை அசைத்து உற்சாகப்படுத்தினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After Dailythanthi's diamond jubilee function finished , PM Modi raised his hands by standing in the convoy and he also wet in rain near Beach road.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற