For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்த பாமக

By Siva
|

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணி பொறுப்பாளர்களை பாமக நியமித்துள்ளது.

PMK appoints election team for 40 LS constituencies

இது குறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் வரும் 24.04.2014 அன்று நடைபெறவுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாக இந்தத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கொள்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், தேர்தல் பிரசார பணிகள் முழுவீச்சில் நடப்பதை உறுதி செய்யவும் வசதியாக மாநில அளவிலும், தொகுதி அளவிலும் தேர்தல் பணிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மாநில அளவில் பாட்டாளி தொழிற்சங்கத் தலைவர் இராம. முத்துக்குமார், வழக்கறிஞர் க. பாலு, மருத்துவர் வேலாயுதம் ஆகியோர் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர அனைத்துத் தொகுதிகளுக்கும் தொகுதி தேர்தல் பணிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களின் விவரம்:

திருவள்ளூர் - ரவிராஜ்
வட சென்னை - இராதாகிருஷ்ணன்
மத்திய சென்னை - ஈகை தயாளன்
தென் சென்னை - மு. ஜெயராமன்
காஞ்சிபுரம் - பொன். கங்காதரன்
திருப்பெரும்புதூர் - திருக்கச்சூர் ஆறுமுகம்
விழுப்புரம் - தங்க ஜோதி
ஆரணி - செந்தமிழ் செல்வன்
அரக்கோணம் - என்.கே. முரளி
வேலூர் - என்.டி. சண்முகம்
திருவண்ணாமலை - காளிதாஸ்
கிருஷ்ணகிரி - கடலூர் சண்முகம்
தருமபுரி - மு. இசக்கி
சேலம் - மு. கார்த்தி, அ. தமிழரசு
கள்ளக்குறிச்சி - க. சண்முகம், அன்பழகன்
நாமக்கல் - செந்தில் குமார், ரமேஷ்
திருப்பூர் - ரவிச்சந்திரன்
ஈரோடு - மகேந்திரன்
நீலகிரி - பத்பயர் பத்மநாபன்
கோயம்புத்தூர் - மின்னல் சிராஜ்
பொள்ளாச்சி - சி.வடிவேல் கவுண்டர்
திண்டுக்கல் - ஜஸ்டின் திரவியம்
கரூர் - கரூர் பாஸ்கரன்
திருச்சி - உ. கண்ணதாசன், உமாநாத்
பெரம்பலூர் - பாலு
கடலூர் - பழ. தாமரைக்கண்ணன்
சிதம்பரம் - திருஞானம்
மயிலாடுதுறை - கோ.ஆலயமணி
நாகப்பட்டினம் - சிவன் சண்முகம்
தஞ்சாவூர் - அரசூர் பொன். ஆறுமுகம், இரா. கனகராஜ், வழக்கறிஞர் மோகன்.
சிவகங்கை - மருத்துவர் அருள்மணி
மதுரை - வீரக்குமார், செந்தில்வேல் தேவர்
தேனி - பொன். காட்சிக் கண்ணன்
விருதுநகர் - பெ. லட்சுமணன்
இராமநாதபுரம் - தளபதி ராஜ்குமார், சண்முகம்
தூத்துக்குடி - க. உஜ்ஜல் சிங்
தென்காசி - திருமலைக் குமாரசாமி யாதவ், சேது. ஹரிகரன்
திருநெல்வேலி - வியனரசு,
கன்னியாகுமரி - இரா.ஹரிகரன்

மாநில மற்றும் தொகுதி நிலையிலான தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவரும் தத்தமது நிலையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK has appointed functionaries for all the 40 lok sabha constituencies to look after election duty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X