For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபையில் 5 வருடமாக 'புலவர்' ஓ.பி.எஸ் வாசித்த 5 'அம்மா புகழ்' கவிதைகள் இவை தான்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மன்னர் ஆட்சி காலத்தில் அவையில் புலவர்கள் புகழ்ந்து பாடி பரிசில் பெறுவார்கள். ஆனால் ஜனநாயக ஆட்சி காலத்தில் ஆள்பவர்களின் குட் புக்கில் இடம் பெற அமைச்சர்களே கவிதை வாசிக்கத் தொடங்கிவிட்டனர்.

Pannerselvam

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது கவிதை பாடி எம்.எல்.ஏக்களை மேஜை தட்ட வைத்து விடுவார். இந்த ஆண்டு அவர் பாடிய கவிதையில் பல வரிகள் கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. நீங்களும் படிச்சுதான் பாருங்களேன்.

என்ன தவம் செய்தோம் அம்மா!

நீங்கள் இதயமுள்ள இறைவனாக புவியில் பூத்தவர்
மக்கள் நலனை மனதில் நிறுத்தி எழுச்சி கொண்டவர்
மாநிலம் மகிழும் வண்ணம் மகிழ்ச்சி தந்தவர்
தேவை என்று கேட்கும் முன்னே உதவி செய்பவர்
துன்பங்களை அழிக்கும் ஆற்றல் கண்டவர்
இல்லை என்றே சொல்லே இல்லாதவர்
சரித்திரத்தை மாற்றும் சக்தி கொண்டவர்
உலகிற்கு வழி காட்டும் அறிவை பெற்றவர்,
நாடு போற்ற அம்மா என்ற பெயரை பெற்றவர்,
என்ன தவம் செய்தோம் உங்களை வணங்கிடவே,
எப்போதும் விழித்திருப்போம். நீங்கள் சொல்வதை செயல்படுத்த,
ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதில் எனது வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன்

English summary
TN Finance minister "Poet" O Pannerselvam recited long poem in Assembly during the budget speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X