For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை முழுவதும் போக்குவரத்து காவல் உதவி மையங்கள்- இடங்கள் இதோ!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை மக்கள் நலனுக்காக பல்வேறு செயல்களை செய்து வருகின்றது.

அந்த அடிப்படையில் தற்போது புதிதாக சென்னை முழுவதும் ஆட்டோ டிரைவர்கள் பற்றிய விழிப்புணர்விற்காகவும், ஆட்டோ கட்டணம் பற்றிய மக்களின் குறைகளை பரிசீலனை செய்வதற்காகவும் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.

பிரீபெய்டு ஆட்டோவிற்காகவும், மக்களின் வசதிக்காகவும் காவல் உதவி மையங்கள் சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ உதவி மையங்கள்:

ஆட்டோ உதவி மையங்கள்:

அப்படி அமைக்கப்பட்டுள்ள ஆட்டோ உதவி மையங்கள் இங்கே வரிசையாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல்:

சென்னை சென்ட்ரல்:

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில், மெயின் கேட், காவல் பகுதி, மத்தியில் அமைந்துள்ள விளக்கு பகுதி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையம்:

கோயம்பேடு பஸ் நிலையம்:

கோயம்பேடு பஸ் நிலையத்தில், மெயின் கேட், பஸ் நிலையத்திற்கு எதிர்ப்புறம், வெளியேறும் பகுதி, காளியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

மாம்பலம்:

மாம்பலம்:

மாம்பலத்தில் ரங்கநாதன் தெரு, ராமேஸ்வரம் தெரு, லேக் வியூ ரோடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம்:

எழும்பூர் ரயில் நிலையம்:

எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில், உள் கேட், வெளி கேட் ஆகிய இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை:

மெரினா கடற்கரை:

மெரினா கடற்கரையில் குயின் மேரிஸ் கல்லூரி, காந்தி சிலை ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

உழைப்பாளர் சிலை:

உழைப்பாளர் சிலை:

உழைப்பாளர் சிலை அருகே, எம்ஜிஆர் நினைவிடம், மெட்ராஸ் பல்கலைகழகத்திற்கு பின்னால் அமைக்கப்பட்டுள்ளது.

வேனல்ஸ் ரோடு:

வேனல்ஸ் ரோடு:

வேனல்ஸ் ரோட்டில் எழும்பூர் ரயில்வே நிலைய பஸ் டெர்மினஸ் அருகே அமைந்துள்ளது.

மேலும் இரண்டு:

மேலும் இரண்டு:

ஸ்பென்சர் பிளாசாவிலும், ராயபேட்டை மருத்துவமனை அருகிலும் கூட இவ்வுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

English summary
In the interest of general public Chennai Traffic Police have taken various initiatives. One of them is the creation of awareness campaigns throughout Chennai city for auto drivers as well as general public regarding the revised fare structures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X