அரக்கோணத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்.. போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரக்கோணம்: ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் ரயில் மூலம் சென்னை உட்பட அருகில் உள்ள நகரங்களுக்கு பணி மற்றும் படிப்பு நிமித்தமாக சென்று வருகின்றனர். இந்நிலையில் சிக்னல் கோளாறு காரணமாக அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வழக்கமாக வரவேண்டிய ரயில் நீண்ட நேரமாக வரவில்லை என கூறப்படுகிறது.

Police did lahti charge on passengers in Arakonam railway station

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க முயன்ற போலீசார், பயணிகள் மீது தடியடி நடத்தினர். போலீசாரின் திடீர் தடியடியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police did lahti charge on passengers in Arakonam railway station. Public did protest on the track for condempting delaying rail.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற