பாஜக..கட்டப்பஞ்சாயத்து! துப்பாக்கியிலிருந்து சீறிய போலீஸ் தோட்டா..சரிந்த சீர்காழி சத்யா..பரபர செங்கை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சத்யா என்கிற சீர்காழி சத்யா (41), இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழிப்பறி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நிலுவையில் உள்ளது.

காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியான சீர்காழி சத்யா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பல்லாவரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார்.
அப்போது வட நெம்மேலி செக் போஸ்டில் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையிலான போலீசார் சத்யாவின் காரையும் மடக்கி சோதனையிட்டுள்ளனர். அப்போது சீர்காழி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செங்கல்பட்டு அருகே பழவேழி பகுதியில் உள்ள மலையில் தனது கூட்டாளிகள் இருப்பதாக கூறியதன் அடிப்படையில் போலீசார் சீர்காழி சத்யாவை அழைத்துக் கொண்டு பழவேலி மலைக்கு வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்கி விட்டு சீர்காழி சத்யா தப்பியோட முயற்சித்துள்ளார். இதனால் போலீசார் சீர்காழி சத்யாவின் மீது ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டதில் இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து ரவுடி சத்யாவை மேல் சிகிச்சைக்காக சென்னை அனுப்பி வைத்தனர்.

என்கவுண்டர் சம்பத்த்தின் போது சீர்காழி சத்யா தாக்கியதில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ரஞ்சித்துக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். தற்போது போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ள சீர்காழி சத்ஜ்யா பாஜக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு செங்கல்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் மணற்கொள்ளையைத் தடுத்தவர்களின் தலையை வெட்டிக் கொலை செய்ததாக கூலிப்படைத் தலைவன் சீர்காழி சத்யா மீதுபுகார்கள் உள்ளது.
மேலும் கோவையில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட மூன்று கொலைகள் உள்பட 5 கொலை வழக்குகளோடு, 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் இவர் மீதுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீர்காழி சத்யா மீது வழக்குகள் உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2021ஆம் ஆண்டு சீர்காழி சத்யா, பாஜக தலைவர்களான நயினார் நாகேந்திரன் மற்றும் வினோஜ் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
குறிப்பாக தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் கேஎன் நேருவின் சகோதரர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடி சீர்காழி சத்யா உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் இணைந்தபிறகு காரில் கெத்தாக வலம் வந்த சீர்காழி சத்யா, பல தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில், தற்போது துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார் சீர்காழி சத்யா.












Click it and Unblock the Notifications