லீவு போடாதீங்க... எங்கேயும் தடியடி நடத்தாதீங்க - காவல்துறையினருக்கு கடும் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நேற்று புதன்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் போது ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவை நடக்கும் நிலையில் காவல்துறையினருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள உத்தரவு:

Police told to behave decently with the public

•போலீசார் மற்றும் அதிகாரிகள் யாரும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது.
•லத்தி ஜார்ஜ், கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
•லாக்கப் மரணத்தை தவிர்க்கும் வகையில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்களை மாலை 6 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் வைத்திருக்க கூடாது.
• வரும் ஜூலை 19ம் தேதி வரை போலீசார் மற்றும் உயரதிகாரிகள் லீவு எடுக்க கூடாது.
• மாணவர்கள் தகராறு பிரச்சினை நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆகிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police personnel have been advised to behave decently wih the public and avoid taking leaves till the elections.
Please Wait while comments are loading...