தீரன் சின்னமலை 212வது நினைவு தினம்... ஈபிஎஸ், ஸ்டாலின் அஞ்சலி - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

கொங்குப் பகுதியில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட வீரர் தீரன் சின்னமலை. அந்தக் காலக்கட்டத்திலேயே மாவீரன் நெப்போலியனிடம் ஆங்கிலேயர்களை அழித்தொழிக்க உதவி கேட்டு திப்பு சுல்தான் அனுப்பிய குழுவில் தன் தளபதி கருப்ப சேர்வையை அனுப்பியவர்.

Political leaders paid homage to freedom Dheeran Chinnamalai

தீரன் சின்னமலையுடன் நேரடியாக போட்டியிட்டு வெற்றிபெற முடியாத ஆங்கிலேயர்கள் அவரை சூழ்ச்சி செய்து வரவழைத்து தூக்கிலிட்டுக் கொன்றனர். இந்நிலையில், அவரது 212ஆவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

சென்னை, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN CM edappadi palanisamy and DMK acting leader paid respect to Freedom fighter Dheeran Chinnamalai on his 212th death anniversary .
Please Wait while comments are loading...