For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி அனல் மின்நிலைய 2 வது யூனிட்டிலும் பழுது… மின் உற்பத்தி பாதிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2 வது யூனிட்டின் கொதிகலனும் பாதிக்கப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட எந்திரங்கள் உள்ளன. இந்த எந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்து வருவதால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், அனல்மின் நிலையத்தில் இன்று மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அனல்மின் நிலையத்தின் 2-வது யூனிட்டில் கொதிகலனில் பழுது ஏற்பட்டுள்ளதால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே 5-வது யூனிட்டில் பழுது ஏற்பட்டதால் அதில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது 2-வது யூனிட்டும் நிறுத்தப்பட்டதால், மொத்தம் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
One of the five units of Tuticorin Thermal Power Station suspended production after a breakdown on Wednesday evening. The second unit suffered a breakdown following a failure in a boiler tube, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X