குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல் வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் வாக்கை அளித்தார்.

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் வாக்குப்பதிவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் வாக்கை பதிவு செய்துள்ளார்.

Presidential election: Chief minister Edappadi palanisami voted as first

ஏற்கனவே முடிவெடுத்தப்படி அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அவரைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் வாக்களித்து வருகின்றனர்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனால் பிற்பகலுக்குள் வாக்குப்பதிவு முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் புதுச்சேரியிலும் முதல்வர் நாராயணசாமி குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார். காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Presidential election: Chief minister Edappadi palanisami voted as first. OPS, Stalin also voted for the Presidential election.
Please Wait while comments are loading...