பேராசிரியர் தீரன் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்! ஈபிஎஸ்- ஓபிஎஸ் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி விவாதங்களில் தினகரன் மீது மென்மையான போக்கை கடைபிடித்ததால் பேராசிரியர் தீரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டவர் பேராசிரியர் தீரன். இவர் பங்கேற்கும் டிவி விவாதங்களில் தினகரன், சசிகலாவை விமர்சனம் செய்யாமல் மென்மையான போக்கையே காட்டி வந்தார்.

Professor Dheeran sacked from ADMK

இதனால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அதிமுகவின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டார். இதுதொடர்பான உத்தரவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பிறப்பித்துள்ளனர்.

அவர்கள் பிறப்பித்த உத்தரவில், கட்சியின் கொள்ளைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறியதாலும் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீரன் இன்று முதல் கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்ற நாள் முதல் அவரது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அதிரடியாக நீக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Professor Dheeran sacked from ADMK alleging that expressing his soft corner on TTV Dinakaran and Sasikala in all the TV debates.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X