மூதாட்டியின் நடன வீடியோவை மோடியின் தாய் என டுவீட்டிய கிரண்பேடி.... வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
மூதாட்டி ஒருவர் நடனமாடும் வீடியோவை பிரதமர் மோடியின் தாயார் தீபாவளிக் கொண்டாட்டம் என்று டுவீட்டிய புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டனர்.
Recommended Video

சென்னை : மூதாட்டி ஒருவர் நடனமாடும் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் என்று டுவீட்டிய புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை நெட்டிசன்கள் செமையாக வறுத்தெடுத்துவிட்டனர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவிற்கு அவர் அளித்திருந்த விளக்கம் கிரண்பேடியை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
தள்ளாத 97 வயதிலும் எவ்வளவு உற்சாகமாகத் தீபாவளி கொண்டாடுகிறார் இந்தத் தாய். நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென்மோடி தன்னுடைய வீட்டில் நடனமாடி தீபாவளியைக் கொண்டாடிய வீடியோ என்று கிரண்பேடி டுவீட்டி இருந்தார்.
|
பழைய வீடியோ
கிரண்பேடியின் இந்த டுவீட்டை பார்த்து பலரும் அவரை வறுத்தெடுத்து விட்டனர். இந்த வீடியோ நவராத்திரி முதலே உலா வருவதாகவும், வீடியோவை பதிவிடுவதற்கு முன்னர் ஒரு முறை சரிபார்த்திருக்கலாமே என்று நெட்டிசன்கள் கருத்துகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.
|
வீடியோவில் இருப்பது யார்?
இது உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரே அல்ல என்று மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ அக்டோபர் மாதம் முதலே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
|
பணிக்கு ஏற்றதல்ல
துணை நிலை ஆளுநர் போன்ற மதிப்புமிக்க பொறுப்பில் இருக்கும் நீங்களே இப்படி செய்யலாமா என்று பலரும் தங்களது ஆதங்கத்தை கொட்டியுள்ளனர். மேலும் இது தங்களின் சிறந்த பணிக்கு ஏற்றதாக இல்லை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
|
பொய் தகவலுக்கு இடமில்லை
சமூகவலைதளத்தில் பொய்யான தகவலை எப்போதுமே பதிவிட முடியாது. அப்படி பதிவிட்டால் அது உடனடியாக வெட்டவெளிச்சமாகிவிடும் என்று மற்றொரு நெட்டிசன் பட்டென உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications