புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளையில் இருந்தே தீபாவளி லீவு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக புத்தாடை, பட்டாசு உள்ளிட்டவற்றை வாங்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வாரத்தின் நடுவில் வருகிறது. இருப்பினும் மக்கள் கூடுதல் விடுமுறையை எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பேருந்துகளில் போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிட்டது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications