ஜெயக்குமாரும், உதயகுமாரும் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.. புகழேந்தி அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார் அமைச்சர் பதிவில் இருந்து விலக வேண்டும் என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, நிதி அமைச்சர் ஜெயக்குமார் கட்சியிலும் ஆட்சியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகப் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Pugazhenthi attacks Ministers

மேலும், தமிழக அரசு இணையதளத்திலிருந்து அமைச்சர்கள் முகவரி நீக்கப்பட்டதற்கும் ஜெயக்குமாரே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இணைய தளத்தில் இருந்து முகவரிகள் நீக்கப்பட்டதன் மூலம் அமைச்சர்கள் தவறு செய்தது உறுதி ஆகிவிட்டதாக மக்கள் எண்ணுகிறார்கள் என்றும் புகழேந்தி கூறியுள்ளார்.

ஆர்.பி. உதயகுமாரும் கட்சிக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்று குற்றம்சாட்டியுள்ள புகழேந்தி, ஜெயக்குமாரும், உதயகுமாரும் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran’s supporter Pugazhenthi has attacked Ministers Jayakumar and Udhayakumar in Bengalore.
Please Wait while comments are loading...