3 முறை தேர்தல் ரத்து... மானக்கேடு… வெட்க கேடு… முன்னாள் தேர்தல் அதிகாரி கோபால்சாமி ஆவேசம்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது வெட்கக்கேடான ஒன்று என முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 3 முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது வெட்ககேடான செயல் என்று முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. மேலும், அந்தப் பகுதியில் பணப்பட்டுவாடா பெரிய அளவில் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது.
இதன் அடிப்படையில், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறும் போது, "தமிழகத்தில் 3 முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மானக்கேடு. வெட்க கேடு. இந்தியாவில் வேறெங்கும் இதுபோல் நடக்கவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் இது போன்று நடந்துள்ளது. இது சிந்திக்க வேண்டிய விஷயம்.
3 முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றால் தமிழ்நாடே ஊழலில் உழல்கிறது என்றுதான் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தீர்மானிப்பார்கள்" என்று கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications