பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றியதில் 'முதல் பரிசு' பெற்ற அமித்ஷா.. கலாய்த்த ராகுல்
பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றியதில் முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு, ராகுல் காந்தி வாழ்த்து சொல்லி கிண்டல் செய்துள்ளார்.
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குநராக உள்ள அஹமதாபாத் மாவட்ட கூடுறவு வங்கியில் பழைய ரூபாய் நோட்டு மாற்றியதற்காக முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு காங்கிரஸ் தலைவர் வாழ்த்து சொல்லி கிண்டல் செய்திருக்கிறார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம், அஹமதாபாத் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் இயக்குநராக உள்ளார். 2016 ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கத்தின் போது இந்த வங்கியில் இருந்து 5 நாட்களுக்குள் ரூ.745 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரியவந்தது.

இது குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அமித்ஷாஜிக்கு வாழ்த்துகாள், அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குநராக இருக்கிற உங்களுடைய வங்கி, 5 நாட்களுக்குள் ரூ.745 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி முதல் பரிசு பெற்றுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பணமதிப்பு நிக்கத்தால் அழிக்கப்பட்டது. உங்களுடைய இந்த சாதனைகளுக்கு பெரிய சல்யூட்." என்று பதிவிட்டு அமித்ஷாவையும் பாஜக ஆட்சியையும் கிண்டல் செய்துள்ளார்.
அதன் கீழே, அமித்ஷாவின் படத்தில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணத்தை அதிக அளவில் பெறப்பட்ட வங்கியின் இயக்குநர் என்றும் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு 81 சதவிகிதம் நிதி அதிகரித்த கட்சியின் தலைவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications