For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் மழை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று சூறைக்காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால்கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நேற்று இரவு முதல் ஆங்காங்கு மழை பெய்துவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு புளியமரம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Rain calms down heat in north Tamilnadu

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், மூன்றாவது நாளாக கன மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் பொதுகமக்ளும் கோடை பிடியில் இருந்து தப்பித்ததோமப்பா சாமி என நிம்மதியடைந்துள்ளனர்.

English summary
Most of the parts of north Tamilnadu gets rain since this morning, the sudden rain calms down heat waves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X