தஞ்சாவூர்: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை விட்டு விட்டு வெளுத்து வாங்கியதால் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பாக 2 லட்சம் ஏக்கர், நடவு பணியாக ஒரு லட்சம் ஏக்கர் என மொத்தம் 3 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது.
தொடர் மழையினால் கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளன. இதனால், சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொது மக்கள் பரிதவிப்பில் உள்ளனர். திருத்துரைபூண்டி பகுதியிலும் தெருக்களில் தண்ணீர் புகுந்ததால் பாதுகாப்பு கருதி பேரிடர் மீட்பு குழுவினர் அங்குள்ளவர்களை மீட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, திருவிடைமருதூர், பூதலூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் 600 ஏக்கர் சம்பா வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்காரணமாக, கல்லணையிலிருந்து பாசன ஆறுகளில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை தொடரும் என்பதால் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது.
கனமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடியாவிட்டால் பயிர்கள் அழுகிவிடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!