For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் மழைக்கு ஒதுங்கினா அருவியில குளிக்கலாம்! வைரலாகும் வீடியோ #chennairains

சென்னையில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழை பயணிகள் அதிகம் வந்து செல்லும் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையை பிய்த்துக் கொண்டு அருவி போல கொட்டியது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : சென்னை சென்ட்ர்ல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு பெய்த மழையால் கூரை வழியே தண்ணீர் கொட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை கொட்டியது. 10 நிமிடத்தில் மட்டுமே 7 செமீட்டர் அளவிற்கு இடியுடன் கூடிய நல்ல மழை பெய்தது. கொட்டித் தீர்த்த மழையால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய மேற்கூரையின் வழியே தண்ணீர் அருவி நீர் போல ஆர்ப்பரித்து கொடியதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் லேசான தூரல் இருந்தது. இரவு 8 மணிக்கு மேல் இடி மின்னலுடன் கொட்டிய மழையால் வெப்பத்தில் சிக்கித் தவித்த மக்கள் சிறிது நிம்மதியடைந்தனர். எனினும் இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

வைரலாகும் வீடியோ

இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு பெய்த மழையின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சென்னை ரெய்ன்ஸ் என்ற அக்கவுண்ட்டில் #chennairains என்ற இந்தக் காட்சிகள் உலா வருகின்றன.

 அருவி போல கொட்டிய தண்ணீர்

அருவி போல கொட்டிய தண்ணீர்

பயணிகள் அதிகம் வந்து செல்லும் சென்ட்ரல் ரயில் நிலைய பிரதான வாயில் அருகே மேற்கூரையின் கேப்பில் உள்ள இடத்தில் இருந்து மழை நீர் அருவியில் கொட்டுவது போல கொட்டியுள்ளது. தண்ணீர் கொட்டும் இடத்திற்கு அருகில் பார்சல் அலுவலகமும் இருப்பது அந்தக் காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது.

 காத்திருக்கும் இடத்திலும் மழைநீர்

காத்திருக்கும் இடத்திலும் மழைநீர்

இதே போன்று மற்றொரு பதிவும் chennai rains ஹேஷ்டேக்கில் உள்ளது. அதில் பயணிகள் காத்திருக்கும் இடத்திலும் ஆங்காங்கே மேற்கூரை ஒட்டைகளில் இருந்து தண்ணீர் ஊற்றுகிறது.

 பயணிகள் அவதி

பயணிகள் அவதி

எந்நேரமும் பயணிகள் வந்து செல்லும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடம் சென்ட்ரல் ரயில் நிலையம் அங்கு நேற்று பெய்த மழைக்கே தாக்கு பிடிக்கமுடியவில்லை என்பது இந்தக் காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. இதனால் பயணிகள் வெள்ளநீர் போலத் தேங்கியிருந்த நீரிலேயே கடந்து சென்று ரயில்களில் பயணப்பட்டனர்.

 இந்த மழைக்கேவா?

இந்த மழைக்கேவா?

இதனிடையே நீரை அப்புறப்படுத்தும் பராமரிப்புப் பணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு குற்றாலம் என்ற பெயரில் வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்தால் இந்த மழைக்கே இப்படி இருக்கே இனி பருவமழை எப்பவும் போல பெய்தால் என்னவாகும் என்று கேட்கத் தோன்றுகிறது.

English summary
Passengers at Central railway station unhappy with chennai rain due to leakages from the roof
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X