சென்னையின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் அகற்றம்.. உட்புற பகுதிகளில் இன்னும் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் முக்கிய சாலைகளில் வெள்ளம் வழிந்தோடியுள்ளது. உட்புற பகுதிகளில் மட்டும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தென் சென்னை பகுதிகளில் துரிதமாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ராட்சத மோட்டார் பம்ப்புகளை கொண்டு மாநகர ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் இப்பணிகளை மேற்கொள்கிறார்கள்.

Rain water recedes in many parts of Chennai

ஆழ்வார்ப்பேட்டை, நந்தனம் பகுதியிலுள்ள முக்கிய சாலை, வெள்ளம் வடிந்த நிலையில், சுத்தமாக காட்சியளிப்பதை இந்த டிவிட்டர் பயனாளியின் வீடியோவில் நீங்கள் பார்க்க முடியும்.

தேனாம்பேட்டையிலிருந்து ஓஎம்ஆர் சாலை வழியாக மேடவாக்கம் பயணித்ததாகவும், வழக்கமான நேரத்தைவிட குறைந்த நேரத்திலேயே சென்றடைந்ததாகவும் கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சிஐடி காலனி உள்ளிட்ட பகுதிகளில் கால்வாயில் குப்பைகள் அகற்றப்பட்டிருந்ததால் வெள்ள நீர் ஓட்டம் மேம்பட்டுள்ளது என்பதும் ஆறுதலான செய்தி. அதேநேரம், இன்னும் கூட வட சென்னை மற்றும் தென் சென்னையின் உட்புற பகுதிகளில் வெள்ள நீர் முழுமையாக அகற்றப்படவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain water recedes in many parts of Chennai city especially in the main roads.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற