கிருஷ்ணகிரியில் போட்டியிட்டு கோட்டைக்குப் போக வேண்டும்... ரஜினிக்கு ரசிகர்கள் விடும் தூது!
ரஜினிகாந்த் கிருஷ்ணகிரியில் போட்டியிட்டு 234 தொகுதிகளிலும் வெற்றி கண்டு முதல்வராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Recommended Video

கிருஷ்ணகிரி : ரஜினிகாந்த் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு 234 தொகுதிகளிலும் வெற்றிமாலை சூடி முதல்வராக கோட்டைக்கு செல்ல வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி, 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று கூறி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அறிவிப்பை வெளியிட்ட சூட்டோடு ரஜினி சுறுசுறுப்பாக அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
நேற்று அரசியல் அறிவிப்பு இன்று உறுப்பினர் சேர்க்கைக்காக இணையதளம், ஆப் அறிமுகம் என்று படு ஸ்பீடாக செயல்பட்டு வருகிறார் ரஜினி. ரஜினியி இந்த வேகம் அவரது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது.

கிருஷ்ணகிரியில் ரசிகர்கள் உற்சாகம்
தமிழகம் முழுவதும் ரஜினியின் அறிவிப்பை அவரது ரசிகர்கள் இனிப்புகளை கொடுத்தும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை அடுத்துள்ள நாச்சிக்குப்பம் ரஜினியின் சொந்த ஊர் என்று ரசிகர்கள் அங்கு பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கிருஷ்ணகிரி டூ கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் அவருடைய சொந்த மாவட்டம், எனவே அவர் இங்கிருந்து தான் போட்டியிட வேண்டும் என்று இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். இங்கு போட்டியிட்டு ஜெயித்து ரஜினி முதல்வராக வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெற்றி பெறுவது நிச்சயம்
ரஜினி இங்கு போட்டியிட வேண்டும். இதே போன்று 234 தொகுதியிலும் அவருக்கு வெற்றியை பெற்றுத் தருவோம் என்றும் ரசிகர் மன்றத்தின்ர் கூறியுள்ளனர்.

ஜெ.வின் பயணம் தொடங்கிய கிருஷ்ணகிரி
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே அவர் கிருஷ்ணகிரியில் போட்டியிட வேண்டும் என்ற குரல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 1991ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு தான் வெற்றி பெற்று முதன்முதலாக ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் ரஜினியை கிருஷ்ணகிரியில் போட்டியிடுமாறு அவரது ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications