திராவிட தலைவர்களை சந்திக்கும் ஆன்மீக அரசியல்வாதி.. என்ன திட்டம் வச்சு இருக்கீங்க ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசியல்வாதி ரஜினியின் கொள்கை என்ன?-மக்கள் கேள்வி- வீடியோ

  சென்னை: ரஜினி தனது ரசிகர்களின் பல நாள் கோரிக்கையான அரசியல் அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டுவிட்டார். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் 2021ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

  அவர் தன்னையுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இது பாஜக கட்சியினரை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

  ஆனால் அவரின் செயல்பாடு எதுவும் அவர் ஆன்மீக அரசியல் செய்வார் என்பதை போல இல்லை. ஒரு சில விஷயங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் கண்டிப்பாக ரஜினியும் தற்போதைய தமிழக அரசியல்வாதிகள் போலவே செயல்படுவார் என்று தோன்றுகிறது.

  ஆன்மீகம்

  ஆன்மீகம்

  ரஜினியின் பாபா முத்திரை தொடங்கி அவருக்கு பாஜக கொடுக்கும் ஆதரவு வரை எல்லாமே அவரது அரசியல் பாதை எப்படி இருக்க போகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. மேலும் அவர் ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றது, இந்து ஆன்மீக தலைவர்களை சந்திப்பது என அவர் தன் அரசியல் பாதையை தமிழக மக்களுக்கு மறைமுகமாக எடுத்து காட்டிக் கொண்டு இருக்கிறார்.

  கருணாநிதியுடன் சந்திப்பு

  கருணாநிதியுடன் சந்திப்பு

  ஆனால் இங்குதான் ரஜினி மக்கள் கணித்த பாதையில் இருந்து மாற தொடங்கி இருக்கிறார். எந்த பாஜக தலைவர்களையும் இதுவரை நேரடியாக சென்று சந்திக்காத ரஜினி திமுக தலைவர் கலைஞர்.கருணாநிதியை அவர் இல்லத்தில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  வீரப்பன்

  வீரப்பன்

  இன்று ரஜினி எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனை அவரது வீட்டில் வைத்து சந்தித்தார். ஆர்.எம்.வீரப்பன் இதற்கு முன்பு அதிமுக கட்சியில் தீவிரமாக இயங்கியவர். தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கவும், வாழ்த்து பெற்று செல்லவும் ரஜினி இவரை சந்தித்தாக கூறப்பட்டுள்ளது.

  அழகிரியுடன்

  அழகிரியுடன்

  இந்த நிலையில் ரஜினி அழகிரி சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வந்தவுடன் அழகிரி வாழ்த்து தெரிவித்தார். இவர்கள் இருவரும் ஏற்கனேவே கொஞ்சம் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியை சந்திக்க அழகிரி நேரம் ஒதுக்க சொல்லி இருக்கிறார்.

  பாதை என்ன

  பாதை என்ன

  இவ்வாறு தொடர்ந்து திராவிட தலைவர்களை ரஜினி சந்திப்பது பாஜக கட்சிக்கு கொஞ்சம் கலக்கத்தை கொடுத்து இருக்கிறது. அதேபோல் அவரது ரசிகர்களும் குழப்பம் அடைந்து உள்ளனர். இவர் என்ன மாதிரியான அரசியல் பாதையில் செல்கிறார் என்று தெரியாமல் தமிழக அரசியல்வாதிகள் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Rajini has announced his political entry. After his announcement VVIP's support Rajini's party increasing day by day. At the same time Rajini meets Dravidiyan politicians continuously. Initially he met DMK leader Karunanithi. Now he meets MGR Kazhakam leader RM Veerappan.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற