ரஜினி அரசியல் பயணம்: மக்களின் ஆதரவு எப்படி?- காவேரி நியூஸ் சர்வே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்கு மக்களின் ஆதரவு எந்த அளவு இருக்கும் என்பது குறித்து 'ரஜினி அரசியல், மக்களின் குரல்' என்ற தலைப்பில் காவேரி நியூஸ் மற்றம் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது.

ஆர்.கே.நகரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் இடைத்தேர்தலில் யார் வெல்லுவார்கள்? என்று காவேரி நியூஸ் மற்றம் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி இணைந்து, கருத்துகணிப்பு நடத்தி அதன் முடிவை கணித்து வெளியிட்டது.

இதன் அடுத்தக்கட்டமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்களின் ஆதரவு ரஜினிகாந்திற்கு எப்படி இருக்கும் என்ற கருத்துகணிப்பை காவேரி நியூஸ் மற்றம் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி இணைந்து கணித்துள்ளது. ரசிகர்கள் ஆதரவு 100 சதவிகிதம் இருந்தாலும் பொதுமக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் வெற்றி பெற்று தலைவராக ஜொலிக்க முடியும்.

ஆதரவு 41% எதிர்ப்பு 59%

ஆதரவு 41% எதிர்ப்பு 59%

அரசியலில் மக்களின் ஆதரவை பெற்று ரஜினிகாந்த் வெல்வாரா? வீழ்வாரா? என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஆதரவு தருவோம் 41 சதவிகிதம் பேரும், 59 சதவிகிதம் பேர் எதிர்ப்பாகவும் கருத்து கூறியுள்ளனர். ரஜினிகாந்த் கூட்டணி அமைத்தால் ஆதரிப்போம் என்று 41 சதவிகிதம் பேரும், எதிர்ப்போம் என்று 59 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.

நடிகர்கள் அரசியல்

நடிகர்கள் அரசியல்

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா என்ற கேள்விக்கு வரலாம் என்று 53 சதவிகிதம் பேரும், வேண்டாம் என்று 47 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.

ஆதரவும், எதிர்ப்பும்

ஆதரவும், எதிர்ப்பும்

ரஜினி அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு வரவேண்டும் என்று 47 சதவிகிதம் பேரும், வேண்டாம் என்று 53 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.

ரஜினிக்கு பெண்கள் ஆதரவு

ரஜினிக்கு பெண்கள் ஆதரவு

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று 49 சதவிகித பெண்களும், வரவேண்டாம் என்று 51 சதவிகித பெண்களும் கருத்து கூறியுள்ளனர்.

யாருடன் கூட்டணி

யாருடன் கூட்டணி

ரஜினிகாந்த் யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு

பாஜக 44%
காங்கிரஸ் 4%
திமுக 18%
அதிமுக 7%
டிடிவி தினகரன் 4%
இடது சாரிகள் 0.7%
தமாகா 2%
மற்றவை 20% என கருத்து கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
The Tamil news channel Cauvery TV joins with News X conducted survey for Rajinikanth political entry successes or failure. People suport, ladies support.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற