இமயமலை புறப்பட்ட ரஜினி... அரசியல், காவிரி கேள்விகளுக்கு நோ கமெண்ட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இமயமலை பயணத்தை மீண்டும் தொடங்கிய ரஜினிகாந்த்- வீடியோ

  சென்னை : 15 நாட்கள் சுற்றுப்பயணமாக நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டுள்ளார். மனைவி லதா ரஜினிகாந்த்துடன் ரஜினி சென்னையில் இருந்து விமானம் மூலம் இமயமலை சென்றார்.

  தீவிர அரசியலில் செயல்பட்டு வந்த நடிகர் ரஜினிகாந்த் 15 நாட்கள் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தனது பயணத்திற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் : இமயமலைக்கு சென்று ரொம்ப வருடமாகிவிட்டது.

  Rajinikanth flied to Himalayas

  15 நாட்கள் இமயமலையில் இருக்கப் போகிறேன். தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளேன். பாபாஜி ஆசிரமத்திற்கு செல்ல இருக்கிறேன், ஆன்மிக குருமார்களையும் சந்திக்க உள்ளேன் என்றார்.

  காவிரி விவகாரத்தில் உங்களின் கருத்து என்ன? அரசியல் வருகைக்காக ஆன்மிக குருமார்களிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காகவா இந்தப் பயணம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். ஆனால் அதற்கெல்லாம் பதில் அளிக்காமல் பிறகு பேசுகிறேன் என்று நழுவி ஓடியுள்ளார் ரஜினிகாந்த்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Rajinikanth flied to Himalayas along with his wife, at Chennai airport rejected to answer for political and cauvery related issues.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற